வரலாற்று பின்னணி கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

avatar

நீங்கள் வரலாற்றை புத்தகங்களிலும், இணையங்களிலும் வாசித்திருப்பீர்கள். பல வியக்கவைக்கும் நிகழ்வுகள், பெரும் எண்ணிக்கையில் நடந்த போர்கள், போராட்டங்கள் என நமது கற்பனையை விஞ்சும் அளவிற்கு பல நிகழ்வுகள் நமது வரலாற்றில் நடந்துள்ளது. அதில் நீங்கள் சிலவற்றை தவறவிட்டிருக்கலாம். அல்லது அறியாதிருக்கலாம். சிலவன எழுதப்படவில்லை எனிலும், படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு புதிய நிகழ்விற்கும் ஒரு தொடக்க புள்ளி தேவை. அப்படி தொடக்க புள்ளியாக இருந்த சில விஷயங்களும், வரலாற்றி புரட்டிப் போட்ட சில விஷயங்களும், சாதாரண கடந்த நிகழ்வுகளும் அடங்கிய ஒரு புகைப்பட தொகுப்பு.


avatar

1920 பீச் சீன்


இது என்ன ஏதோ டிரம் போல இருக்கிறது என ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! இது டிரம் போன்றது தான். இது 1920களில் பீச் செல்லும் பெண்கள் தங்கள் உடைகளை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட கருவி.


avatar


இவர் யார் என்று தெரிகிறதா? உலக மக்களை தனது நடிப்பால் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சார்லி சாப்ளின். 1944ல் சாப்ளின் அவரது மனைவியுடன் அமெரிக்காவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.


avatar


நிச்சயமாக 2000களுக்கு மேல் பிறந்த பலரால் இந்த இடம் எது என கணிக்க முடியாது. ஏனெனில், இப்போது இந்த இடம் உலகின் உச்சபட்ச கேளிக்கை தளமாக விளங்குகிறது. இது தான் அன்றைய துபாய். இன்று விண்ணை எட்டும் கட்டிடங்கள் கொண்ட துபாய் அன்று எப்படி இருந்தது என பாருங்கள்...


avatar


சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கருப்பு, வெள்ளையர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதை உடைத்து, தங்கள் காதல் மூலம் முத்திரை பதித்தவர்கள் இந்த ஜோடி. இந்த ஆண் ஸ்வீடிஷ் நடிகர் டோலப் லுண்ட்கிரன், இந்த பெண் ஜமைக்கா பாடகி கிரேஸ் ஜோன்ஸ். இவர்கள் இருவரும் 1980களில் உறவில் இருந்தனர்.


avatar


மதா ஹரி அல்லது மர்க்ரீத் என அழைக்கப்பட்ட இந்த பெரும் ஒரு பிரபல கவர்ச்சி நடன கலைஞர். மர்க்ரீத் எனும் இந்த பெண் ஜெர்மனியில் முதலாம் உலக போரின் போது கைது செய்யபட்டார். நடன வேலையை விட்டு, இவர் அந்த நாட்டில் உளவாளியாக இருந்ததன் காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


avatar


இந்த பெண்மணி தான் உலகின் முதல் டிரைவர். இந்த படம் 1900களில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.


avatar


இந்த படத்தில் இருக்கும் பிரபலத்தில் சிலர் உடனே கண்டுபிடித்திருக்கலாம். நடுவில் இறகுகளான தொப்பி அணிந்திருக்கும் அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அமெரிக்காவின் ஹோபி மலைவாழ் மக்களுடன் இவர் 1931ல் எடுத்துக் கொண்ட படம் இது.


avatar


இவர் 1918ல் பிறந்தவர். இவரது பெயர் ராபர்ட் வாட்லோ. முதலாவது பிறந்தநாள் கொண்டாடும்போது இவரது உயரம் மூன்று அடி மூன்றரை அங்குலம். தொடர்ச்சியாக இவர் வளர்ந்து கொண்ட போனால். 1937ல் இவரது உயரம் எட்டடி, நான்கு அங்குலமாக இருந்தது. அப்போது இவர் உலகின் உயர்ந்த மனிதராக சாதனை படைத்தார்.


avatar


முனிச் பகுதியில் வெற்றுடலுடன் உலா வரும் அர்னால்ட். மக்கள் மத்தியில் பாடி பில்டிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜிம்மிற்கு செல்ல ஊக்குவிக்கவும் இப்படி ஓர் பிரமோஷன் நடந்திருக்கிறது. இந்த படம் 1967 நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படமாகும்.


avatar


அதென்னமோ கார் மேல கருப்பா வெச்சுருக்காங்களே... அது தான் உலகின் முதல் மொபைல் ரேடியோ மற்றும் டெலிபோன். இது 1920களில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.


avatar


முதலில் இதை பிகினி என்றால் இன்றைய தலைமுறை நம்பவே நம்பாது, அல்ட்ரா தின் பிகினி எல்லாம் வந்துவிட்ட காலம் இது. இன்று பிகினி மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், சில தசாப்தங்களுக்கு முன்பு இது மிகவும் கவர்ச்சியான ஒன்று. 1973ல் பிகினி உடையை நியூயார்க் நகரின் ஒரு பெண் மாடல் மோட்டார் வாகன நிகழ்ச்சியில் பிரமோஷன் செய்த போது.


avatar


பிரபலங்களின் மர்மமான மரணங்களில் இதுவும் ஒன்று. மக்களின் இளவரசியாக வாழ்ந்த காரணத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு மரணம். இளவரசி டயானாவின் பிரபலமான புகைப்படம் இது. 1985ல் ரிசப்ஷனில் ஜான் ட்ரவோல்டாவுடன் வெள்ளை மாளிகையில் நடனமாடும் டயானாவின் புகைப்படம்.


avatar


இந்த படம் 1937ல் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். விலங்குகள் காட்சி சாலையின் பாதுகாவலர் புதியதாக பிறந்த புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த குட்டிகளும், தங்களுக்கு உணவளிக்கும் நபருடன் வேடிக்கையாக விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றன.


avatar


கேம்ப்ரிட்ஜ் பல்கலக்கழகத்தின் பட்டதாரிகள். கோட் சூட் உடையில் படித்த மிடுக்குடன் நடந்து வரும் இரண்டு இளம் பட்டதாரிகள்.


avatar


குழந்தைகளின் அந்தபார்வையின் மூலம் பிரபலமடைந்த புகைப்படம் இது. தென்னாப்பிரிக்காவில் தங்கள் செல்லபிராணியை குளிப்பாட்டும் போது குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் படம்.


avatar


முஃப்பின் எனப்படும் ஒருவகை அப்பம் உணவு. 1910களில் வீதிகளில் தலை மீது ஒரு பலகையில் முஃப்பின் அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருக்கும் நபர்.


avatar


1920களில் டாட்டூ பார்லர்களில் டாட்டூ குத்திக் கொள்ளும் பெண்களின் புகைப்படம்.
Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES