மறுபடியும் அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்... சந்தானத்தை கேட்டுக் கொண்ட தனுஷ்

avatar


சென்னை: சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி உள்ளிட்டோர் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். விழாவுக்கு நடிகர் தனுஷ் வந்திருந்தார்.

மேடையில் தனுஷும், சிம்புவம் கட்டிப்பிடித்தபோது கைதட்டல்களும், விசிலும் பறந்தன. எதிரிகள் என்று கூறப்படும் இருவரும் பாசத்துடன் கட்டிப்பிடித்தனர். அப்போது சிம்பு ரொம்பவே எமோஷனல் ஆனார். நண்பன் சிம்பு அழைத்ததாலேயே இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததாக தனுஷ் தெரிவித்தார். பகையை எல்லாம் மறந்து தனுஷும், சிம்புவும் நன்பர்களாகிவிட்டதையே இது காண்பிக்கிறது.

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இதனால் மேடையில் பேசிய சந்தானம் தனுஷை ஹாலிவுட் நடிகர் என்று அழைத்தார். உடனே குறுக்கிட்ட தனுஷ் தயவு செய்து மறுபடியும் அப்படி சொல்லாதீர்கள் என்றார். ஹாலிவுட் என்பது வேறு மொழி படம், அவ்வளவு தான். தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள ஹாலிவுட் சென்றேன். அவ்வளவு தான். அதற்காக ஹாலிவுட் நடிகர் என்று எல்லாம் என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் தனுஷ்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES