நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்

avatar


ஹைதராபாத்: சிரஞ்சீவி படத்தில் இருந்து வெளியேறியுள்ள ஏ.ஆர். ரஹ்மான் விஜய் 62 படத்திற்கு இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ராயலசீமாவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்து வருகிறார். சை ரா நரசிம்ம ரெட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ரஹ்மான் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சிரஞ்சீவி ஒரு அருமையான நடிகர். அவர் மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். இது ஒரு அழகான படம். ஆனால் எனக்கு பிற வேலைகள் உள்ளது. பிசி நான் பல வேலைகளில் பிசியாக இருக்கிறேன். நான் என் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளேன். நான் பிசியாக இருப்பதால் சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியுள்ளேன் என்றார் ரஹ்மான். சிரஞ்சீவியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார். ரஹ்மான் ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள விஜய் 62 படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அனிருத் ரொம்பவே பிசியாக இருப்பதால் ரஹ்மானைதான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES