சமந்தா - சைதன்யா திருமண வரவேற்பு விருந்து - நவம்பர் 12-ல் கோலாகலம்!

avatar


ஐதராபாத் : கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் கடந்த அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது. காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவுக்கும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். எனவே, திரையுலக நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்பட்டது. அதன்பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் தேனிலவுக்காக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர். லண்டன் உள்ளிட்ட இடங்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அக்டோபர் 21-ம் தேதி சமந்தா - சைதன்யா இருவரும் நெருங்கிய நண்பர்களுக்கு சென்னை தாஜ் கோரமன்டல் ஹோட்டலில் விருந்து கொடுத்தனர். இந்தப் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார் சமந்தா. இந்த விருந்தில் ராணா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சமந்தா - சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 12-ம் தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES